இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன் செல்வராசா,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இ.த.அ.க இன் ஊடக இணைப்புச் செயலாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இ.த.அ.க இன் பொதுச்செயலாளருமாகிய துரைராஜசிங்கம் ஆகியோருடன் கட்சி ஆர்வலர்கள் பொதுமக்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
இதன் போதுகடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்கள் காட்டடிய ஆர்வத்தினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்பால் கெண்டுள்ள பற்றினையும் சுட்டிக்காட்டி பிரதிநிதிகளால் நன்றிதெரிவிக்கப்பட்டுதன்.
ஏதிர்காலத்தில் கட்சியின் செய்பாடுகளில் மக்களின் பங்களிப்புபற்றியும்,கட்சியின் எதிர்காலசெயற்பாடுகள் பற்றியும் விளககம்கொடுக்கப்பட்டது.
இதன்பின்னர் பிரதிநிதிகள் பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.