பழுகாமம் ஜெகனின் “சிலப்பதிகாரத்தில் உளவியற் பார்வை”நூல் வெளியீடு

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இருக்கின்ற உளவியற் தன்மைகளை வெளிப்படுத்தும் முகமாகபழுகாமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரினால் சிலப்பதிகாரத்தில் உளவியற் பார்வை எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று(24) சனிக்கிழமை பழுகாமம் திருக்குறள் முன்னனிக்கழக மண்டபத்தில் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சி;குடி பிரதே சசெயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை அவர்களும் கலந்துகொண்டார்.

இதன் போது நூல் நயவுரை வழங்கவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினரும்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கவிஞருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் கலந்துகொண்டார்.

இதன்போது பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக வழிபாடுகள் இடம்பெற்றதுடன். அதிதிகள் உரை நூல் வெளியீடு என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.