அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு புதிய மாணவ சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

(லியோன்)      
                          
மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு புதிய மாணவ சிறார்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி .ரா.ஞானராஜன்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக வருகை தந்த கிழக்கு மாகான சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மெதடிஸ்த ஆலய முகாமைக்குரு அருட் குரு ஷாம் சுபேந்திரன்.அமிர்தகழி மெதடிஸ்த ஆலய குரு எஸ் .பஞ்சரெட்ணம் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய  உக்கிரானகாரர் செல்வி .எஸ். வசந்தகுமாரி  ஆகியோர் கலந்து கொண்டனர். இப் பாடசாலையின் அதிபர், ஆசிரியை  திருமதி .ராஜகுமாரி மற்றும் மாணவ சிறார்களின் பெற்றோர்களினால் இன் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை மலர் மாலை அணிவித்து மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பழைய மாணவ சிறுவர்களினால் புதிய சிறுவர்களுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு, வாழ்த்துக்கள் பறி மாறிக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப் பட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.  தொடர்ந்து சிறார்களின் சிறு கலை நிகழ்வு இடம்பெற்றதுடன்  சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது .