மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாததாகும். அவர்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.
மட்டக்களப்பில் மிகவும் முதன்மையான பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் 2015 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு புதிதாக அனுமதி பெறும் 160 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று அதிபர் அருட்தந்தை எக்ஸ்.ஜ.ரஜீவன் தலைமையில் புனித மிக்கேல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன் அதிபர் அருட்தந்தை எக்ஸ்.ஜ.ரஜீவன் வரவேற்புரை நிகழ்தினார். இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.