மட்டக்களப்பு,கல்லடி,உப்போடையில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியா கல்லூரியின் மண்டபத்தில் இந்த கருத்தரங்கு நேற்று மாலை 5.00மணி தொடக்கம் 6.00மணி வரை நடைபெற்றது.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பணியாற்றும் தேசிய ஊடகம் மற்றும் இணையத்தளங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு ஊடக வள நிலையத்தின் ஏற்பாட்டில் பிராந்திய இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.
இதில் பிராந்திய இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெரிடி கமகே,பிராந்திய செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவர் அஜந்த பண்டார மற்றும் ஊடக வளவாளர் ஏ.பி.மதன்,கிழக்கு ஊடக வளநிலையத்தின் அமைப்பாளர் எல்.தேவஅதிரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இந்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவாநாதன் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும்சட்ட சிக்கல்கள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செய்தி சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளல்போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.