மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர்பிரச்சினையை தீர்ப்பதற்கான உயர்மட்ட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோடை காலங்களில் அதிகளவில் குடிநீர் பிரச்சினையினை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நகர அபிவிருத்தி நீர்வழங்கழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் கல்குடா தொகுதி மற்றும் மட்டக்களப்பு தொகுதி ஆகியவற்றுக்கு குடிநீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர்வழங்கழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஓட்டமாவடி,வாழைச்சேனை,கிராண் உட்பட பல பகுதிகளுக்கு நீர்விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

கித்துள்-உறுகாமம் குளங்களை இணைத்து நீர்விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது நீண்ட காலத்திட்டம் என்ற வகையில் குறுகிய காலத்திற்குள் திட்டம் ஒன்றை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறுக்கிய காலத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீர் திட்டத்தினை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்துடன் அதற்காக 20 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் பொறியியலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்கீழ் அந்த திட்டத்திற்கு தேவையான நீதியினைப்பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் குறித்த திட்டத்திற்கு தேவையான நடவடிக்கையினை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.