கிழக்குமாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமாரி பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மீனவர்களுக்கு வலை பெற்றோல்மெக்ஸ் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
இவற்றினை வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு நகரில் உள்ள மாகாணசபை உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீனவர்கள் பலர் கலந்து கொண்டதுடன் உதவிகள் கோரியிருந்த மீனவர்களுக்கு மாகாணசபை உறுப்பினரினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட சொறுவாமுனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொக்குவில்,கல்லடி,பாலமீன்மடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 10மீனவர்களுக்கு இந்த உதவிகள் முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டன.