மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பிரதேசத்தில் உள்ள வறிய மக்களுக்கு மட்டக்களப்பு தாமரைக்கேணி சத்ய சாயி சேவா சங்கத்தினால் இன்று ஒரு தொகுதி ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் அமைந்திருக்கும் தாமரைக்கேணி பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா சங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லைக் கிராமங்களான வடமுனை, ஊற்றுச்சேனை கிராமங்களில் ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் பல சேவைத் திட்டங்களை மேற்கொண்டுவருகிறது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பெரிதும் பாதிப்புற்றிருந்த வேளையில் அக்கிராமங்களுக்கான போக்குவரத்துகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது.
இச்சூழ்நிலையை அறிந்து தாமரைக்கேணி சாயி நிலையத்தினால் விடுக்கப்பட்ட அவசர தகவலினை அடுத்து பல உதவிகள் அம்மக்களைச் சென்றடைந்தன.
தன் தொடர்ச்சியாக முதியோர், பெண்கள், குழந்தைகள் என வகைப்படுத்தப்பட்டு உடைகள் குளிர்கால படுக்கை விரிப்புகள் என்பன இன்று அக்கிராம மக்களுக்கு அக்கிராமங்களின் கிராம உத்தியோகத்தர் எஸ். அச்சுதன் அவர்களின் முன்னிலையில் வினியோகிக்கப்பட்டன.
இப்பொருட்களை கொழும்பு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சாயி அன்பர்களும் கொழும்பிலுள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையொன்றும் வழங்கியிருந்தன.
தாமரைக்கேணி சாயி நிலைய தலைவர் ஸ்ரீ. எஸ். சாமித்தம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாயி நிறுவனங்களின் கிழக்குப் பிராந்திய இணைப்பு குழு தலைவர் ஸ்ரீ. ஜி. விநாயகமூர்த்தி மற்றும் சேவை இணைப்பாளர் எம்.கிருபராஜா மற்றும் இளைஞர் அணியினர் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.