கலை கலாசார பீடத்தின் விரிவுரைகளை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளேன் - கி.ப.கழக உபவேந்தர்.

மாணவர்களின் நன்மை கருதி கலை கலாசார பீட பீடாதிபதியிடம் முடிவினை மாற்றுமாறு கூறியிருந்தேன். அந்த வகையில் திங்கட்கிழமை கலை கலாசார பீடத்தின் அவையைக் கூட்டி இவ்விடயம் சம்பந்தமான சாதகமானதொரு முடிவை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர்  தெரிவித்தார்.

கலை காலாசார பீட மாணவர்கள் தம்மிடம் மன்னிப்புக் கோரும் வரை விரிவுரைகளுக்குச் செல்வதில்லை என்ற முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கலை கலாசார பீடத்தின் பீடாதி பதியுடன் இவ்வியடம் தொடர்பில் தான் கலந்துரையாடியதாகவும், ஒரு சில ஆசிரியர் களது தூண்டுதலால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு எந்த வகையிலும் மாணவர்கள் பலியாக முடியாது என்பதனாலும் விரிவுரையாளர்களது இந்த முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு தான் கோரியதாகவும் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்;காக ஒன்று திரண்டிருந்த  மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தச் சென்ற கலைகலாசார பீட
விரிவுரையாளர்களுடன் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் மன்னிப்பு கோரும் வரை மாணவர்களுக்கான விரிவுரைகளுக்கு செல்வதில்லை என கலைகலாசார பீட விரிவுரையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தனர். 

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எந்த ஒரு காரணத்திற்காகவும், தடைப்படுவதையோ, பின்தங்கிப் போவதையோ அனுமதிக்க முடியாது. அந்த வகையில்  மாணவர்களின் நன்மை கருதி கலை கலாசார பீட பீடாதிபதியிடம் முடிவினை மாற்றுமாறு கூறியிருந்னே;. அந்த வகையில் திங்கட்கிழமை கலை கலாசார பீடத்தின் அவையைக் கூட்டி இவ்விடயம் சம்பந்தமான சாதகமானதொரு முடிவை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.