மட்டக்களப்பு,வெல்லாவெளியில் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிராமிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் ஆய்வாளருமான சிவகணேசன் தெரிவித்தார்.
இலங்கைக்கு பௌத்தம் வருவதற்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.