வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரர் மகா கும்பாபிசேகம்

இலங்கையின் பாடல்பெற்ற தலம் என்ற பெருமை கொண்டதும் கிழக்கு மாகாணத்தின் வரலாற்று பொக்கிசமாகவும் கருதப்படும் திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸப்பெருமானின் கும்பாபிசேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.


கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர் புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கும்பாபிசேக குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

திருஞானசம்பந்தரினால் பாடல்பெற்றதாக கருதப்படும் இந்த ஆலயத்தின் கும்பாபிசேகத்தினையொட்டி எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.