காணாமற்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு - 39ம் கிராமத்தில் சம்பவம்

(தவக்குமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ம் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரான வேலாச்சு-நாகலிங்கம் என்பவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஷார் தெரிவித்தனர்.


39ம் கிராமம் செல்வபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவர் கடந்த 22ம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போனதையடுத்து வீட்டார் இவரை தேடிவந்தனர். வீட்டுக்கு வராததையடுத்து வெல்லாவெளிப் பொலிஷாருக்கு முறைப்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் 38ம் கிராம மயானத்திற்கு அருகில் சடல் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஷார் மற்றும்; களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.எம்.ஏ.அப்துல் றியால் உயிரிழந்தவரின் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்;டார்.

இறந்தவர் கடந்த சில நாட்களாக சுகயீனம் உற்றிருந்ததாக உறவினர் தெரிவித்ததாகவும் பொலிஷாசர் தெரிவித்தனர்.  இவர் 5 பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடதக்கது.

இவரின் மரணத்திற்கான காரணம் பற்றி வெல்லாவெளிப் பொலிஷார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.