மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு தரம் 01க்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி என் .தர்மசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அமிர்தகழி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் இருந்து பாடசாலைக்கு வருகை தந்த புதிய மாணவர்களை இப் பாடசாலை 02ஆம் தர மாணவர்களால் மலர் மாலை அணிவித்து பாடசாலை மண்டபதிற்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்ற பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இறை வணக்கத்தோடு பாடசாலை கீதம் இசைக்க பட்டு பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இங்கு உரை ஆற்றிய பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை ஆசிரியை திருமதி .தே ,லோகநாயகம், பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதோடு நின்று விடாமல் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் பாடசாலையின் நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் பெற்றோர்கள் முழுமையான பங்களிப்பையும் இவர்கள் எதிர்கால சமூக வழிகாட்டியாக அமைய அர்ப்பணிப்புடன் செயல் பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நிகழ்வில் இறுதியாக புதிய மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்களும் சீருடைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .