(தவக்குமார்)
மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண மிஸன் பிராத்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் இராமக்கிருஸ்ண மன்றத் தலைவர் கு.ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் ப+மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.பின்னர் மங்கள விளக்கேற்றப்பட்டது.
இந்த அடிக்கல் நடு விழாவிற்கு மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிஸன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகஹராஜ் அவர்கள் ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்ததார்.
தலைமை உரையினை தலைவர் கு.ஜதிஸ்குமார் நிகழ்த்தினார் அவர் தனது உரையில் எமது மன்றமானது இற்ரைக்கு ஜம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சிறிய ஓலைக் கொட்டிலில் ஆரம்பித்து இன்று ஓரளவு சாதாரண கட்டடத்தில் இயங்கும் அளவிற்கு வளம்பெற்றுள்ளது.
எங்கள் அயராத முயச்சிக்கெல்லாம் காரணமாக இருந்தவர் பகவான் ஸ்ரீ இராமக்கிருஸ்ணரே காரணம் என உரையில் குறிப்பிட்டார் .
அதனைத்தொடர்ந்து ஆன்மீக அதிதியாக வருகைதந்திருந்த ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகஹராஜ் அவர்கள் சிறப்பாக தனது ஆன்மீக உரையினை நிகழ்தியிருந்தார்.
நாங்கள் அனைவரும் இந்த ப+மியில் அவதரித்த காலம் தொடக்கம் இற்ரைவரைக்கும் இறைசிந்தனையுடையவர்களாக நம்பிக்கையுடையவர்களாக இறைசிந்தனையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் பிரார்த்னை மண்டபத்திற்கான அடிக்கல் நடு வைபவம் நடைபெற்றது
இவ்விழாவிற்கு மாணவர்கள், ஆசிரியரகள் இஅதிபர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள் பொதுமக்கள், ஆன்மீக அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும்ஆலய தர்மகர்த்தாக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியாக சுவாமி சதுர்புஜானந்தாஜி மகஹராஜ் அவர்கள் மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஸ்ண வித்தியாலயத்திற்கு சென்று அதிபர் வே.ஜெயரெட்ணம் அவர்களுடன் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார் பின்னர் மண்டூர் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கும் சென்று தரிசித்துச் சென்றார்.
இறுதியாக ஸ்ரீ இராமக்கிருஸ்ண மன்றத் செயலாளர் அ.கிருசலாதேவி அவர்களின் நன்றி உரையுடன் இந் நிகழ்வு நிறைவடைந்தது.