மட்டக்களப்பில் களைகட்ட ஆரம்பிக்கும் ஒளிவிழா நிகழ்வுகள் - ஜோசெப் வாஸ் வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)  

யேசு கிறிஸ்துவின் பிறப்பினை அறிவிக்கும் வகையில் கிறிஸ்தவ மக்கள் அனுஸ்டிக்கும் ஒளிவிழா நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களை கட்ட ஆரம்பித்துள்ளன.
                                                                                     
மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசெப் வாஸ் வித்தியாலய ஒளிவிழா நிகழ்வு வித்தியாலய  அதிபர்  எம் .ஐ .சுதாகரன்  தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஒளிவிழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற மாகான கல்வி பணிப்பாளர் எ .எம்.இ.போல் ,சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி எ .சுகுமார்  மற்றும் டச்பார் இன்னாசியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி ஜேசுதாசன் , கன்னியர் மட அருட் சகோதரிகள் ,ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வொளிவிழா  நிகழ்வுகளில் மாணவர்கள் தமது ஒளிவிழா செய்திகளை,நடனம் , கரோல் கீதங்கள், பாலன் பிறப்பு போன்ற காட்சிகள் மூலம் சிறப்பாக செய்திகளை  மாணவர்களுக்கு வழங்கினர்.

நிகழ்வுக்கு  வருகை தந்திருந்த  அதிதிகள் தமது  ஒளிவிழா நிகழ்வு விசேட செய்திகளை இம் மாணவர்களுக்கு  நல்ல பல கதைகள் மூலம் வழங்கியதோடு,  மாணவர்களுக்கு பரிசில்களும் ஆசிரியர்களுக்கு நினைவு சின்னங்களும்  வழங்கி வைத்தார்கள்.

இறுதி  நிகழ்வாக நத்தார்  தாத்தா  மாணவர்கள்  மத்தியில்  வருகை தந்து ,  நடனமாடி , இனிப்புகள் வழங்கி  ஒளி விழா நிகழ்வை நிறைவு செய்து வைத்தார் .