மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் இந்த மாதத்தின் சபை அமர்வு என்ற அடிப்படையிலும் அடுத்த சபை அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையிலும் இந்த மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற வகையில் இன்றைய நாளில் மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியணிந்துவந்துடன் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவாகளுக்கு அஞ்சலியும் செலுத்துமாறு மாநகரசபை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.இதன்போது மாநகரசபை உறுப்பினர் அருண் அவர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியணிந்துவந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தனர்.
அதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது எதிர்வரும் 25ஆம் திகதி மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுநூலகத்தினை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி வருகைதரவுள்ளதாகவும் இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு மாநகரசபை முதல்வரினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அரசாங்கம் நிதியொதுக்கீடுகளை செய்துள்ளதுடன் மேலும் சில திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் இங்கு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.
மாநகரசபையின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு வருகைதரும் ஜனாதிபதி பொதுநூலக திறப்பு விழாவினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவைப்பாடுகள் குறித்து கோரிக்கையினை முன்வைப்பதற்கான சபை அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்க ளுமத்தியில் முன்மொழிவுகளுக்கான அ னுமதிகள் வழங்கப்பட்டன.
கல்லடி பாலத்தில் நீண்டகாலமாக ஒளிராமல் இருக்கும் மின்கட்டமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் 20மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் சபையினால் அனுமதியளித்தால் அதனை திருத்தம் செய்யமுடியும் என தெரிவித்த நிலையில் அதற்கான சபை அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோன்று கல்லடி கடற்கரை பகுதியில் இராணுவத்தினரால் உணவகம் அமைக்கப்பட்டு அது தொடர்ந்து விரிவாக்கப்பட்டுசெல்வதாகவும் அங்குள்ள இராணுவ உணவகத்தினை அகற்றி அதில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்கள், பெண்கள் வாழ்வாதாரத்திற்காக வழங்கவேண்டும் எனவும் இதன்போது மாநகரசபை உறுப்பினர் தனுஸபிரதீபினால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு சபையினால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கொக்குவில் பகுதியில் உள்ள சந்தைப்பகுதியில் காணப்படும் கழிவறைகள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும் அங்குவரும் வியாபாரிகள் குறிப்பாக பெண் வியாபாரிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவற்றினை திருத்தியமைத்து வழங்கவேண்டும் என இதன்போது மாநகரசபை உறுப்பினர் ஓம்நாத் அவர்களினால் கோரப்பட்ட நிலையில் அதனை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என முதல்வரினால் உறுதியளிக்கப்பட்டது.
இன்றைய சபை அமர்வின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் பல்வேறு கருத்துமோதல்களும் இடம்பெற்ற நிலையில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
.jpeg)

