சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சடலங்களை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலங்கள் மாமாங்கம் மூன்றாம் குறுக்கினை சேர்ந்த 56வயதுடைய சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் அரசடியை சேர்ந்த 36வயதுடையவர் சொர்ணலிங்கம் குகேஸ் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்ததை தொடர்ந்து சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பணிப்புரைகளை விடுத்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.