நேற்று பிற்பகல் 4.00மணியளவில் மீன்பிடிக்கச்சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குருமண்வெளியை சேர்ந்த புஸ்பராஜா(40வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குருமண்வெளியில் இருந்து குறித்த பிரதேசத்துக்கு மாடுகளை மேய்ப்பதற்காக வருவதாகவும் மாடுகளை மேய்க்கவிட்டுவிட்டு மீன்பிடிக்கச்சென்றவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் இன்று முற்பகல் 11.00மணியளவில் மீட்கப்பட்டு மகாஓயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
