ஞாயிற்றுக்கிழமை காலை சிவானந்தா தேசிய பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க தலைவரும் பிரதேச செயலாளருமான வி.தவராசா தெரிவித்தார்.
கடந்த மாதம் பழைய மாணவர் சங்க கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் முக்கிய பரீட்சை காரணமாக அக்கூட்டம் இரத்துச்செய்யப்பட்டு எதிர்வரும் 09ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
உலகமெல்லாம் ஆயிரக்கணக்கான சிவானந்தா பழைய மாணவர்கள் பரந்துவாழும் நிலையில் பாடசாலையினை கட்டியெழுப்பும் தேவை கருதி அனைவரையும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஏதும் சந்தேகம் இருப்பின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வி.தவராஜாவின் தொலைபேசி இலக்கமான0773738646 இற்கோ அல்லது செயலாளர் எஸ்.ரவீந்திரன் 0714275375 என்ற தொலைபேசி இலக்கத்தோடோ தொடர்புகொள்ளமுடியும்.
