கொஸ்லந்தை பிரதேசத்தில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை-குருமண்வெளியில்

(தவக்குமார்)

பதுளை மாவட்டத்தின்  கொஸ்லந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனத்தத்த்pல்  உயிர் நீர்த்த மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆத்ம சாந்தி வேண்டி குருமண்வெளி கல்வி மேம்பாட்டுக் கழத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆத்மசாந்தி பிராத்தனையினை மேம்பாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.


அப்பிரதேசத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் மெழுகுவத்தி ஏற்றி ஜந்து நிமிட மௌன நினைவஞ்சலியுடன் இந்த பிராத்தனையினை நடத்தினர்.

இந்நிகழ்வு கல்வி மேம்பாட்டு தலைவரும் ஆசிரியருமான பா.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கிராமசேவை உத்தியோகத்தர் ஜெ.சேம்படினோஜன் றோபின், விளையாட்டுக்கழக மூத்த உறுப்பினர் நா.நாகராசா,இ.கோபிநாந் கழக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனைத்து மாணவர்களும் கைகளில் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு இந்த அனர்த்ததில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலிசெய்தனர்.