(தவக்குமார்)
புலவர்;ம்ணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றமும் மண்டூர் கலை இலக்கிய அவையும் இணைந்து நடாத்திய புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 36வது நினைவுதின நிகழ்வு மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுது.
ஆரம்ப நிகழ்வாக புலவர்மணியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் மங்கள விளக்கேற்றப்பட்டது.
அதனைத்தொடந்து இறைவணக்கம் பாடப்பட்டது பின்னர் தொடக்கவுரையினை கலைஇலக்கிய அவையின் தலைவர் எஸ்.புஸ்பானந்தன் மிகவும் நிகழ்த்தினார்.
தொடந்து தலைமையுரையினை புலவர்மணி நினைவுப் பணிமன்ற தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம் நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு அதிதிகளாக வருகைதந்திருந்த எழுத்தாளர் மண்டூர் அசோகா, கவிஞர் மாணிக்கசபாபதி உதவிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நினைவுப் பேருரையினை பேராசிரியர்.செ.யோகராசா நிகழ்த்தினார்.
நிகழ்வின் போது தழிழ் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் கரகாட்டம் வள்ளி திருமணம் அண்ணாவியார் க.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை கௌரவிக்கும் முகமாக மண்டூர் முருகனாலய வண்ணக்கர் திரு.பொ.செல்வக்குமார் அவர்களும் வருகைதந்திருந்தார் அன்றை நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இன் நிகழ்விற்கு பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் சங்கங்கள் புத்திஜீவிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது.
இறுதியாக நினைவுப்பணிமன்ற செயலாளர் பெ.சத்தியலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் இன் நிகழ்வு நிறைவடைந்தது.