வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் வெல்லாவெளிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட திவிநேகும வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித்திணைக்களத்தினால் வரட்சியினால் பாதிக்ககட்ட 43 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமுத்தி நிவாரணம் பெறுகின்ற மக்களுக்கு பிரதேச செயலாளர் வ.வில்வரெத்தினம் தலைமையில் திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 2கிலோ உருளைக்கிழங்குவீதம் 15190 கிலோ உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. இது பிரதேசசெயலகத்தின் வாழ்வின் எழுச்சிமுகாமைத்துவப்பணிப்பாளர் க.உதயகுமார் மற்றும் தலைமை முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி-ஜீவகுமாரின் ஒழுங்கமைப்பில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உருளைக்கிழங்கு வழங்கும் வைபவத்தில் இவர்கள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மக்களுக்கு உருளைக்கிழங்குகளை பகிர்தளிக்கும் நிகழ்வுகள் வெல்லாவெளிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.







