இதன் முதலாவது நிகழ்வு கோரளைப்பற்று வடக:கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வம்மிவெட்டுவான் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் காலை (04) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிரான் ரமண மகரிஷி வித்தியாலயம், வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம், ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம், திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்;, பிறைந்துரைச்சேனை வித்தியாலயம், தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயம், திருப்பெருந்துறை சிறி முருகன் வித்தியாலயம், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் நேற்று(04) கணனி விஞ்ஞான தொழினுட்ப ஆய்வு கூடங்கள் பிரதியமைச்சர் பிரபா கணேசனால் திறந்து வைக்கப்பட்டன.
இன்றைய தினம் காலைமுதல், மங்களகம மங்களராமய வித்தியாலயம், ஆரையம்பதி நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம், 40ம் வட்டை விபுலாநந்தா வித்தியாலயம், வெல்லாவெளி-சின்னவத்தை அரசினர் வித்தியாலயம், ஆனைகட்டியவெளி வித்தியாலயம், மண்டூர் 13 ஆம் கொலனி விக்னேஸ்வரா வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயம்;, சின்னவத்தை சிறி பந்தராம விகாரஸ்தானய ஆகியவற்றில் இன்று கணனி விஞ்ஞான தொழினுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கப்படவிருக்கின்றன.