இந்த தாழமுக்க பிரதேசமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடையலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.
அவ்வாறு அது வலுவடைந்து சூறாவளியாக உருவாகும் சந்தர்ப்பத்தில் இதற்கு இலங்கையினால் பிரேரிக்கப்பட்ட ‘பிரியா’ எனும் பெயர் சூட்டப்படும்.
கடல் பிராந்தியங்களுக்காக வானிலை முன்னறிவிப்பு இலங்கையின் கிழக்கு கடல் பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்களில்கூட மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படலாம். வங்காளவிரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கலாம். இதனால் இக்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினை சேர்ந்த க.சூரியகுமாரன் தெரிவித்தார்.
;.
