மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட தேவையுடைய பிள்ளைகளின் விசேட தேவை நிலைமைகள் அவர்களது நடத்தைகள் நோய் குணங்குறிகள் இருப்பின் அவற்றை அடையாளம் காணும் முறை பற்றிய தெளிவுபடுத்தல் விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வில் வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நல வைத்திய நிபுணர் திருமதி விஜி திருக்குமார் , சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மேகராஜ் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட குழந்தை வைத்திய நிபுணர் திருமதி விஜி திருக்குமாரினால் ஆசிரியர்களுக்கு விசேட தேவையுடைய சிறார்களின் ஆற்றல் விருத்தி , செயல்பாடுகள் மூலம் பிள்ளையின் ஒட்டு மொத்த விருத்திக்கான செயற்பாடுகளின் மீது சிறந்த தாக்கம் செலுத்தக் கூடிய விடயங்கள், பிள்ளையின் தனி திறமைகளை விருத்தி செய்வதற்காக கைவினைகளை எவ்வாறு ஈடுபடுத்தல் ,உடல் உள சமூக ரீதியில் ஆயத்தப்படுத்தல், பூரண சுதந்திரம் கொடுத்தல் போன்ற செயல் பாடுகளை எவ்வாறு முன்பள்ளி ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்ற விரிவான விளக்கங்கள் நிகழ்வில் கலந்துக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.