மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள பெட்டகம் நூலின் வெளியீட்டு விழாவில் தலைமையுரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தனித்துவமான பாரம்பரியம்,தனித்துவமான வரலாற்றினை கொண்டுள்ளார்கள்.தங்களது உற்பத்தி ஊடாக,தொழில் ஊடாக தமக்கு தேவையான பொருட்களுக்கு வடிவம் கொடுத்துள்ளனர்.
அந்த வடிவங்கள் இன்றைய தலைமுறையினரால் முற்றாக மறுப்பட்டு தங்களால் தங்களுக்கு உருவாக்கப்பட்ட வடிவங்கள் எல்லாவற்றையும் மறந்து வெளிநாடுகளில் இருந்துவரும் பிளாஸ்டிக் பொருட்களை பாவிக்கும் யுகம் பரவலாக உருவாகிவருகின்றது.
இந்த பிளாஸ்டிப்பொருட்கள் பாவிப்பு மிகவும் தீங்கு விளைவிக்கும் விடயமாகவும் அதில் உணவு தயாரிப்பது உகந்தது அல்ல என மருத்துவ ஆராய்ச்சிகளில் சுட்டிக்காட்டப்படும் இந்த நிலையில் எங்களுடைய மூதாதையர் தமது காலத்தில் எந்தளவுக்கு இந்த விடயங்களை உணர்ந்தவர்களாக இந்த உபகரணங்களை பாவித்துள்ளனர்.இயற்கையோடு இணைந்ததாக,பூமியின் மண் வளத்துக்கோ,நீர் வளத்துக்கோ எந்தவித கேடுதலையும் ஏற்படுத்தாத வகையில் இந்த பண்டைய உபகரணங்கள் புதிய சமூதாயத்துக்கு சொல்லி நிற்கின்றது.
தற்போதுகூட இந்தியாவின் எந்த பகுதியில் பார்த்தாலும் வெள்ளியிலான செம்பிலான பாத்திரங்களை பாவிப்பதிலும் உணவகங்களில் பண்படுத்தப்பட்ட வாழை இலை மற்றும் தாமரை இலைகளை பாவிப்பதை காணமுடிகின்றது.
பிளாஸ்டிக் பொருட்கள் மோகம் என்பது இலங்கையிலேயே அதிகமாக உள்ளது என்று கருதமுடிகின்றது.ஐரோப்பிய நாடுகளில் கூட கூடுதாலாக அவர்களின் பாரம்பரிய முறைகளையே கொண்டிருக்கின்றார்கள்.நாங்கள் வரலாறை மறந்துசெல்லும் ஒரு சமூகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் தான் இவ்வாறான ஒரு நூலை வெளியிட மாவட்ட செயலகம் முடிவுசெய்தது.
இந்த மாவட்ட செயலகம் இங்கிருந்து செல்லும்போது இந்த கோட்டை தொல்பொருள் காட்சியகமாக மாற்றம்பெறும்போது இவ்வாறான பொருட்கள் சேகரிக்கப்பட்டு,எமது வரலாறை மற்றவர்களுக்கு சொல்லும் இடமாக மாற்றம்பெறவேண்டும் என்பதற்காக இந்த நூல் விற்பனை ஊடாக பெறப்படும் நிதியைக்கொண்டு நிதியம் ஒன்று ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இந்த மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்று நம்பிகின்றோம்.
அண்மையில் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியினை வழங்குவதில் பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,வர்த்தக துறையினர்,சிவில் சமூகத்தினர் உட்பட பல திணைக்களங்கள்,நல் உள்ளங்கள் உதவிகளை வழங்கினார்கள்.
அதன் ஊடாக ஏறக்குறைய ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை ஐந்து லொறிகளில் பதுளை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்ககூடியதாக இருந்தது.அதெபோன்று சேர்க்கப்பட்ட பணம் தற்போது எம்மிடம் உள்ளது.அதனை அனர்த்ததின்போது பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பெயரில் வங்கிக்கணக்குகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்துவருகின்றோம்.இதற்கு உதவியை அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு எந்தவித பொருட் சேகரிப்பிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்றும் அவ்வாறு சேகரிக்க முனைவோரை இனி பொருட்சேகரிப்பில் ஈடுபடவேண்டாம் என்று அறிவுறுத்தும் படியும் கேட்டுக்கொள்கின்றோம்.காரணம் இனிமேல் அது தொடரும்போது பலவிதமான குளறுபடிகள் இடம்பெறலாம் என்ற சந்தேகமும் சிலர் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தமுனையலாம் என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளதால் இந்த செய்தியையும் அனைவருக்கும் தெரிவிக்கும்படி இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.