வெல்லாவெளியில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கொலணிப்பகுதியில் காணியொன்றை துப்புரவு செய்யும்போது அப்பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சேனைப்பெயர்ச்செய்கைக்காக விவசாயி ஒருவர் தனது நிலத்தினை துப்புரவுசெய்யும்போதே இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைக்குண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் கல்லடியில் உள்ள குண்டு செயலிழக்கச்செய்யும் படையினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயழிலக்கச்செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு அருகில் கடந்த காலத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகாம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.