இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை நடாத்தும் புதிய அதிபர் ,ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு தொடர்பான கலந்துரையாடல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி .உதயரூபன் தலைமையில் நேற்று பிற்பகல் 03.00 மணிக்கு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .
நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் 2007 / 20 இலக்க சுற்று நிரூபத்திற்கிணங்க கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் , 98/23 இலக்க சுற்று நிரூபத்திற்கிணங்க அதிபர் நியமனம் ,மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ,ஆசிரியர் சம்பள நிலுவை , அதிபர் ,ஆசிரியர் இடர் உதவி கடன் முறையாக நடைமுறைப்படுத்தல் , மேற்கு கல்விவலயத்தில் நிபந்தனை அடிப்படையில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் ,மேற்கு கல்குடா கல்வி வலயங்களில் கடமையாற்றும் அதிபர் ,ஆசிரியர்களுக்கு இடமாற்றம் , உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க உள்வாங்கப்பட்டுள்ள அதிபர் சேவையினை ஏற்றத்தாழ்வுகளை சீராக்கள் ,பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நியமிப்புகளை நிறுத்தி ,கல்வி நிர்வாகசேவை பரீட்சையை வருடந்தோறும் நடத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ,அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறான பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
அத்தோடு நேற்றைய தினம் கல்குடா கல்விவலயத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அவ்வலய அதிபர் ,ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.