மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் பணியாற்றி வருகின்ற கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களை வளப்படுத்துவதற்கான செயலமர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யோகராஜா தலைமையில் இடம்பெற்றது .
இச்செயலமர்வில் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றிவருகின்ற பல்வேறு பட்ட தினைக்களங்களுடைய அதிகாரிகளுக்கான தெளிவு படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது.
கிராம புற சிறுவர்கள் எதிர் நோக்கின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ,பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு ,கல்வி நடவடிக்கை போன்ற பல்வேறு பட்ட சிறுவர்களபிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் , தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் ,நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர்கள் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள்,மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .