வவுணதீவில் மினிசூறாவளி மூன்று வீடுகள் சேதம் - ஓடு விழுந்து சிறுவன் படுகாயம்

(சுமன்)

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தின் கரவெட்டி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டடி பகுதியில் இன்று பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்துள்ளான்.

இன்று பிற்பகல் 12.00மணியளவில் வீசிய இந்த மினி சூறாவளி காரணமாக வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் சுவர்களும் சேதமடைந்துள்ளன.

இதன்போது வீட்டின் கூரையின் ஓடு வீழ்ந்ததன் காரணமாக சிறுவன் ஒருவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் நாவற்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.