மட்டக்களப்பு குழந்தை யேசு பாலர் பாடசாலையின் பெற்றார் தின நிகழ்வு

மட்டக்களப்பு குழந்தை யேசு பாலர் பாடசாலையின் பெற்றார் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (18.11.2014)  புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நடன, நாடக, கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் அதிதிகளாக மறைக்கல்வி நடுநிலைய பணிப்பாளர் அருட்தந்தை ஜே.யூலியன், பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.தயாபரன், புனித சிசிலியா பெண்கள் பாடசாலை அதிபர் அருட்சகோதரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெற்றோர்தின நிகழ்வின் இறுதியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.