சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுகளின் பொறிமுறைகளை வலுப்படுத்தும் திட்டம்

(லியோன்)

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கி வருகின்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுகளின் பொறிமுறைகளையும், அவற்றினால் வழங்கப்படும் சேவைகளையும் வலுப்படுத்தும் வகையிலான பயிற்சி செயற்திட்டம் ஒன்று நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

நேற்றைய தினம், காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தக் பயிற்சி முகாமினை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அசோக அலவத்த தலைமையேற்று நடத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பரிவுகளிலும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றுமு; மகளிர் அபிவிருத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இப்ப பிரிவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தெவைகள் மற்றும் மாவட்ட ரீதியாக சிறுவர்கள பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக தொடர்பு பட்ட ஏனைய நிறுவுனனங்களுடன் ஒரு வலைப்பினனலை ஏற்படுத்தி ஒன்றிணைக்கப்பட்ட சேவையாக சிறுவர் பெண்களது தேவைகளை நிறைவுற்று வதற்காக உத்தியோகத்தர்களை வலுப்படுத்துவதந்காக இந்தப் பயிற்நசி நெறி நடத்தப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவுளுக்கு கதிரை, ஆமசை, கணிகள், என்பனவும் வழங்கப்பட்டன.

இதில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் , மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோக்தர் திருமதி ஏ.அருணாழினி,  முன்பள்ளிப் பருவ இணைப்பாளர் வி.முரளிதரன், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன், தேசிய பாதுகாப்பு அதிpகாரசபை கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி நிசா றியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.