இதன்போது கலாசூரி திருமதி அருந்ததி சிறிரங்கநாதனும் வருகை தந்திருந்தார். இவர்கள் எமது நிறுவகத்தைப் பார்வையிட்டதுடன் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பிரேம்குமார் மற்றும் பேராசிரியர் சி.மௌனகுரு, துறைத்தலைவர்கள் ஆகியோருடன் நிறுவக செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பல்சமூகத்தினரின் பாரம்பரிய இசை மற்றும் இசைக்கருவி பயன்பாடுகளை வருடந்தோறும் தேசிய மட்டத்தில் நடைபெறும் இசைக் கொண்டாட்டத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பாகவும் கவனஞ் செலுத்தப்பட்டது.
மேலும் நோர்வே நாட்டின் உதவி மூலமாக மூன்று வருடங்களுக்கு செயற்படுத்தப்படவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பான வரைபொன்றும் தயாரிப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது.
தமிழ், முஸ்லிம், மற்றும் பறங்கியர் இனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலாசார திணைக்கள உத்தியோகஸ்தர் மலர்செல்வனும் கலந்து கொண்டிருந்தார்.




