பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.சச்சிதானந்தம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ணமிசன் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகாராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.
இதன்போது பாடசாலைக்கும் கல்விக்கும் அரும்பணியாற்றி ஓய்வுபெற்றுச்சென்ற ஆசிரியர்களும் தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது நடைபெற்ற ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் மாணவர்களையும் அதிதிகளையும் பரவசத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.