மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இந்த ஆண்டு சம்பியன்

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முதன்முறையாக நடாத்திய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிண்ண மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாநகரசபையின் பட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக அணிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணிகள் பங்குகொண்டன.

இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி முதல் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகஇரண்டாம் இடத்தினையும் அணி வெல்லாவெளி பிரதேச செயலக அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இறுதி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.