மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பதுளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பகிர்ந்தளிப்பு

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணியில் மாவட்ட மக்கள் மற்றும் அமைப்புகளிடம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கேசரிக்கப்பட்ட பொருள்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைளயிக்கப்பட்டன.


மட்டக்களப்பு நகரின் காந்திப் பூங்கா மற்றும், மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்ட பொருள்கள் நான்கு லொறிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் அடங்கிய நான்கு லொறிகள் பதுளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனால் கையளிக்கப்பட்டு, அவற்றில் இரண்டு பண்டாரவளை பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலாள குழுவினர் குறிப்பிட்ட சில பொருள்களை கொஸ்லந்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நேரடியாக சென்று பகிர்ந்தளித்தனர்.

மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு வெள்ளிக்கிழமை முதல் பொது மக்கள் நலன் விரும்பிகளால் பொருள்கள் கைகயளிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது முதல் பொது மக்களும் நலன் விரும்பிகளும் உணவுப் பொருள்களையும், புதிய ஆடைகள், மற்றும் தேவையான பொருள்களையும் வழங்கி வருகின்றனர். அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக   கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினர் ஐம்பதாயிரம் ரூபா பணத் தொகையினர் வழங்கினர்.

சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக   கைத்தொழில் சம்மேளனத்தினால் ரூபா ஒரு லட்சம் பெறுமதியான பொருள்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா பணம், இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன் புரி சங்கத்தினால் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் என்பனவும் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்புக் கல்லடியிலுள்ள விழிப்புலனற்றோர் தரிசனம் நிறுவனத்தினால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு உதவும் முகமாக ஒரு தொகை நிவாரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

அத்துடன், மாவட்ட செயலகம், மாவட்ட திட்டமிடல் செயலகம், மட்டக்களப்புக் கல்லடியிலுள்ள விழிப்புரனற்றோர் தரிசனம் நிறுவனம், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அரசாங்க வாகனச் சாரதிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு உதவும் முகமாக ஒரு தொகை நிவாரணப்பொருட்களைக் கையளித்தனர்.

அதே நேரம், சுவிஸ்லாந்து நாட்டை தளமாக கொண்டு இயங்கும் முனைப்பு நிறுவனம் முனைப்பின் அனர்த்த நேர உதவித்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிக்கு 150 குடும்பங்களுக்கு தேவையான ஒரு தொகுதி அத்தியாவசிய உலர் உணவு மருந்துப்பொருட்களை சனிக்கிழமை பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து, மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கைகயளித்தனர்.

இதன் போது, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ரா நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்,  உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை மாலை வரை அனைத்து இடங்களிலும் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள், பால்மா வகைகள், குழந்தைப் பால்மாகள், புடவைகள், பிஸ்கட், குடிதண்ணீர், அரிசி, குழந்தைகள் பெண்களுக்கான பொருள்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்புகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்ட பொருள்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து பொதி செய்யப்பட்டு லெறிகளில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.