மட்டக்களப்புக்கு அமெரிக்க தூதரக அதிகாரி விஜயம்:மாணவர்களுடனும் சந்திப்பு

(லியோன்)  
                                                                                         
மட்டக்களப்பு மாவட்ட ஸ்டா சொலிட்டாரிட்டி நிறுவனத்தின் அனுசரணையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் ,யுவதிகள் இடையிலான இன,மத ,கலாசார, ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்லடி நிறுவனத்தின் முகாமையாளர் வி.கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அமெரிக்கதூதரகத்தின் ஸ்டா மத்திய நிலைய ஊடக கலாசார, கல்வி விவகாரங்களுக்கான அதிகாரி நிகோலா சுளிக் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ,கல்லடி இசை நடன கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் தேவைப்பாடு, இவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.