விமானத்தில் சில்மிசத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பினை சேர்ந்த பிரித்தானிய பிரஜை கைது

இலண்டனில் இருந்துவந்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக கருதப்படும் மட்டக்களப்பினை சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


குறித்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டவரும் நண்பர்கள் எனவும் இவர்கள் இருவரும் இலங்கை வரும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் வைத்தியர்கள் என்பதுடன் பெண்ணுக்கு 27வயது எனவும் கைதுசெய்யப்பட்டவருக்கு 41வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.