ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளினால் கிரின் கார்ட் லொத்தரி வீசா (கிரின் காட், Green Card Lottery Visa) நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை மட்டக்களப்பு நகரத்தில் நடை பெறவுள்ளது.
இலவசமாக எவ்வாறு விண்ணபிப்பது பற்றிய விளக்கங்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் வழங்கப்படும்.
இலவசமாக நடைபெறும் இவ் நிகழ்ச்சி மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர் முதற்கொண்டு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். விளக்கவுரையாடலின் முக்கிய குறிப்புகள் கையடக்க தொகுப்பாக இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.