தென்மோடி இசையில் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்டஒரு புத்தாக்க நாடகமான நொண்டி நாடகம் பௌர்ணமி தினமான இன்று மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மகுடம் கலை இலக்கிய வட்டம் சார்பில் மேடைஏறுகிறது.
மட்டக்களப்பில் இன்று ஆடப்படுவதும் மன்னாரில் பண்டு ஆடப் பட்டதுமானநொண்டி நாடகம் ஒருபழமை வாய்ந்த தென் மோடிக் கூத்தாகும். பரிகாசமும், கிண்டலும், அங்கதச்சுவையும், அறப்போதனைகளும், நிறைந்தது இக் கூத்து. அரசர் வரலாறுகூறும் கூத்துமரபில் அரசர் அல்லாதோர் பற்றிக் கூறும் முதல் நாடகமாக இதனைக் கொள்ளலாம்.
இத்தென் மோடி நாடகத்தின் இசையை அடிப்படையாகக் கொண்டுஉருவாக்கப் பட்ட இசைநாடகம்இது .
ஒருபுத்தாக்கம் எனலாம்1962இல் பேராசிரியர் வித்தியானந்தன் பேராததனைப் பல்கலைக் கழக மாண்வர்களைக் கொண்டுஇந்நாடகத்தை செம்மை ஆக்கம் செய்து மேடைஇட்டார்.
ஏறத்தாழ 52 வருடங்களுக்குப் பின் இதனை புதிய வடிவத்துடன் ஒரு பரீட்சாத்தமாக பேராசிரியர் மௌனகுரு உருவாக்கியுள்ளார் .
இது கூத்தன்று.கூத்தின் பாடல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட புதிய ஆக்கமாகும் என்கிறார் பேராசிரியர் மௌனகுரு.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் 1962 இல் இந் நாடகத்தை பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு மேடையிட்டார். ஏறத்தாள 52 வருடங்களின் பின் நான் இதனை புதிய உத்திகளுடனும்புதிய பரிமாணத்துடனும் இதற்கு ஒரு மேடை வடிவம் கொடுத்துள்ளேன் எனவும் தமிழில் ஒரு ஒபேறாவை(opera)கொணரவேண்டும் என்றபேரவாவின் ஆரம்ப முயற்சி இது எனவும் கூறுகிறார் இந் நாடக இயக்குனர் பேராசிரியர் மௌனகுரு.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக முன்னாள் இசைத்துறை தலைவி பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன் தனக்கு பெரும்உதவியாக இருந்தார் எனவும் இதற்கு வயலின் இசை வழங்குகிறார் ஓய்வு நிலை இசைத்துறை விரிவுரையாளர் சரஸ்வதி சுப்ரமணியம் எனவும் இதற்கான ஹார்மோனிய இசையைஇசை விற்பன்னரான ஜூட். வழங்குகிறார் எனவும் மோகனதாசன் மத்தளம், தபேலா முதலிய தோல் கருவிகளைஇசைக்கிறார்எனவும் குறிப்பிட்ட மௌனகுரு பலஇசைக் கலைஞர்களின் சங்கமைப்பில் உருவான நாடகம் இது என்கிறார்.
இந்நாடகத்தை பொது மக்கள்முன் மகுடம் இலக்கிய வட்டம் சார்பில் கொண்டு வருகிறார் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின்.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம். 1950,1960,1970களில் நாடகங்கள் மேடையிடும் களமாக அமைந்திருந்தது. மீண்டும் அச்சூழலை உருவாக்க முயல்கிறார் துடிப்பு மிக்க மாநகரசபை ஆணையாளர் உதயகுமார். இவர்களின் உதவியினாலேயே இந்நாடகம் மேடைஏறுகிறது.