ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஸன் மகா வித்தியாலயம் சாதனை

(லியோன்) 
                                                                                                            மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஸன் மகா வித்தியாலத்தில் 2014 ஆண்டு நடைபெற்ற தரம் 5  புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய  இப்பாடசாலையின்  28 மாணவர்களில் 6 மாணவர்கள்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் .


இவர்களில்  மாணவன் சசிக்குமார் கிருட்சிகன் 188 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதல் இடத்தினையும் ,மாவட்ட ரீதியில் 4ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார் .

இவருடன் இப்பாடசாலை மாணவர்களான பாஸ்கரன் துவாகரன்  180 புள்ளிகள்  , யோகரெட்ணம் அக்சயன்  175 புள்ளிகள் ,வர்ணகுலசிங்கம் ஹாமேஸ்வரர்  175 புள்ளிகள் , பரமசிவம் துஸ்யந்தி  171 புள்ளிகள் ,நடேசபதி பர்ஷா  165 புள்ளிகளை பெற்று புலமைப் பரிசில் சித்தியடைந்ததோடு  மற்றும் 16 மாணவர்கள் 100க்கு அதிகமான புள்ளிகளை பெற்று  இப்பாடசாலைக்கும்  கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .