சுவிஸ் முனைப்பு அமைப்பினால் செங்கலடிப்பிரதேசத்தில் இனங்காணப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடைய குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்து கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை கிராம சேவையாளர் வி.கனகரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் க.சத்தியவரதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மலசலகூடங்களை கையளித்தார்.
சுவிஸ் முனைப்பு அமைப்பு இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவருகின்றது.
கடந்த 4 வருடங்களாக இயங்கிவரும் இவ் அமைப்பினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழிலில் ஈடுபடுவதற்காகவும், கல்விக்காகவும், இன்னோரன்ன உதவிகள் வழங்கப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



