இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்களில் சிலவற்றில் தூரப்பிரயாணங்களுக்காக பயன்படுத்தப்படும் பஸ்கள் பயணிகளுக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்களினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
பஸ்களின் இருக்கைகளில் கம்பங்கள் உருக்கு தகடுகளினால் ஒட்டப்பட்ட நிலையிலும் முனைகள் கூர்மையான நிலையிலும் இருப்பதனால் இருக்கையில் அமர்ந்துசெல்வோருக்கு ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சடுதியான பிரேக் பிடிக்கும்போது இருக்கையில் இருப்போர் தலைகளில்படும்போது படுகாயங்கள் அடையக்கூடிய நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகமாக திருகோணமலை-மட்டக்களப்பு பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களில் இந்த நிலையிருப்பதனால் அனர்த்தங்கள் ஏற்படும் முன்னர் அவற்றினை தடுப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இப்பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் சிலவை இவ்வாறு சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.