புனித மிக்கேல் கல்லூரியில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் 2013இல் பல்கலைக் கழகத்துக்கு சித்தியெய்திய மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இன்றைய தினம் (29) நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பழைய மாணவர்கள், ஜேசுசபைத் துறவிகள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட்டோர் கலந்துசிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மாணவர்களுக்கு நினைவுப்பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.