இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கடந்த ஆண்டு 2014ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகத்துக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலகங்களுக்கு 80 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.
இந்தப்பணம் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்தப்பணமானது யானையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படுவதற்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் குறித்த பணம் அனுப்பிவைக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் இது தொடர்பில் கடுமையான எமது ஆட்சேபனையினை தெரிவித்தேன்.
இதற்கு பதிலளித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த பணத்தினை தமது அமைச்சு கையாள்வதில்லையெனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலமே அந்த பணம் அனுப்பிவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புகொண்டு குறித்த பணத்தினை உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கையெடுப்பதாகவும் அமைச்சின் செயலாளர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த பணம் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
