பொலநறுவைப்பகுதியில் பல தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகள் உள்ள நிலையில் காடுகள் சார்ந்த நிலையில் உள்ள தமிழ் கிராமங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொலநறுவை பிரதேசத்தில் உள்ள கரப்பளை பகுதியில் நேற்று முன்தினம் யானையின் தாக்குதல் காரணமாக ஓய்வுபெற்ற புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரப்பளையில் இருந்து பள்ளவில்லு பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் மீன்வாங்க சென்றபோது யானையின் தாக்குதலுக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கரப்பளை பிரதேசத்தினை சேர்ந்த சோமசுந்தரம் சண்முகநாதன்(69வயது)என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வெலிக்கந்தை பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு அவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் யானைகள் காடுகள் இன்றி கிராமத்துக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள பகுதிகளில் யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
