அரங்க ஆய்வு கூடத்தால் மலையக கூத்தியல் கலைக்குழுவுக்கு கௌரவிப்பு

மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தினால் பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினருக்கான் கௌரவிப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை அரங்க ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.

இந்து கலாச்சார அலுவல்கள்  திணைக்களகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற பாரம்பரிய கலைகளின் சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்டு

காமன்கூத்தை நிகழ்த்துவதற்காக பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இவர்களது காமன் கூது;தைக் கண்டு களித்த பேராசிரியர் மௌனகுரு தங்களது அரங்க ஆய்வு கூடத்துக்கு வருகை தருமாறு அழைத்ததற்கமைய வருகை தந்திருந்த பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினனை அரங்க ஆய்வு கூடத்தின் பேராசிரியர் சி.மௌனகுரு, மாணவர்கள், வரவேற்றுக் கலந்துரையாடயதுடன், கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவமும் வழங்கினர்.

பொகவந்தலாவ மலையக கூத்தியல் கலைக்குழுவினர் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியதுடன், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமை இதில் சிறப்பம்சமாகும்.