எமது சமூகத்திற்கு விழிப்பூட்டலை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்குறித்த கருப்பொருள் சம்மந்தமான மேடைநாடகம் மற்றும் இது தொடர்பான விளக்கவுரை போன்றவற்றை மட்டக்களப்பு உளநல உதவிநிலையம் கடந்த 10ம் திகதி தொடக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றது.
உளநல உதவிநிலையப் பணிப்பாளரும் இயேசுசபைக் குருவுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் தலைமையில் அவருடைய நிறுவன ஆற்றுப்படுத்துனர்கள் இந் நிகழ்வினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக உளநல தினமான கடந்த 10ம் திகதி மட் ஜோசப் வாஸ் வித்தியாலயத்திலும் நாவலடிநாமகள் வித்தியாலயத்திலும் புனித சிசிலியா பெண்கள் தேசியபாடசாலையிலும் 14ம் திகதி அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம் போன்றவற்றிலும் இந் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது இன்னும் பலபாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.