வந்தாறுமூலையில் புலிக்கூத்து

மறைந்தும் அழைந்துவம் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து இன்றைய தினம் மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வானது, கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரே~;ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.து~;யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாகவே நடைபெறவுள்ளது. 

இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இவ்வாற்றுகையினை நிகழ்த்தவுள்ளனர். மாணவி து~;யந்தியின் ஆய்வானது மட். கல்குடாத்தொகுதியில் ஆற்றுகை செய்யப்படும் புலிக்கூத்து கலைவடிவம் பற்றியதே. 

இவ்வகையில் வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்படுகின்ற வௌ;வேறுபட்ட புலிக்கூத்து ஆற்றுகை வடிவங்களில், வந்தாறுமூலை - பலாச்சோலை, வாகரை - அம்மன்தனாவெளி முதலிய கிராமங்களில் ஆடப்படும்  இரு வடிவங்களே ஆற்றுகை செய்யப்படவுள்ளது என கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.