(தவக்குமார்)
மண்டூர் பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் நவராத்திரி விழா வருடா வருடம் ஒழுங்கு முறைப்படி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ்வருடமும் ஒன்பது நாட்களும் துர்க்கைஉ இலட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு நவதானிய நிறைகுடம் வைக்கப்பட்டு ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர பாராயணத்துடன் குங்கும அர்சனை பஜன் என்பன நடைபெற்று நற்சிந்தனைகள் இடம் பெற்று இறுதியாக மகா மங்கள அராத்தி இடம்பெறும்.
திருமணமாகா கன்னிப் பெண்களினால் குங்கும அர்ச்சனை செய்யப்படும் ஒரே அளவான குங்குமமே ஒன்பது நாட்களும் அர்சிக்கப்பட்டு இருக்கும் விஜயதசமியன்று பெண்களுக்கு வழங்கப்பட்டும் இங்கு குங்கும அர்ச்சனை செய்த கன்னிகள் இரண்டு மூன்று வருட காலத்திற்குள் நல்ல வரன்களை பெற்று வாழ்கின்றமை கண்கூடு விஜய தசமியன்று பொங்கலுடன் தீர்த்தோற்சவம் நடைபெறும் பின்பு பெண்களுக்கு காளாஞ்சி வழங்கப்படும் விஜயதசமி அன்று வருடாவருடம் வித்தியாரம்பம் ஜன்பதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செய்யப்படும்
இதுவரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் இவ் வருடம் நிலையத் தலைவர் நா.கிருபாகரன் தழலமையில் நடைபெற் இவ் விழாவில் 65 குழந்தைகளுக்கு வித்தியாரம் செய்து வைக்கப்பட்டது இதனை முன்னாள் கிழக்கு பிராந்திய இணைப்புகுழுத் தலைவரும் தற்போதுதைய மத்திய அறக்கட்டளை உறுப்பினருமான டாக்டர் என். பிரேமதாசன் செய்து வைத்துள்ளார்.